LOADING...
மகளிர் அக்கவுண்டிற்கு வந்த ரூ.1000! திடீர் திருப்பமாக அதிரடி காட்டிய முதல்வர் விஜய்
இன்று மகளிர் அக்கவுண்டிற்கு வந்தது ரூ.1000

மகளிர் அக்கவுண்டிற்கு வந்த ரூ.1000! திடீர் திருப்பமாக அதிரடி காட்டிய முதல்வர் விஜய்

எழுதியவர் Venkatalakshmi V
May 15, 2026
11:19 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, 'மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தின் கீழ் மே மாதத்திற்கான நிதி எப்போது வரும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இன்று தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு வழங்கப்படும் முதல் உரிமைத் தொகை இது என்பதால் மக்கள் மத்தியில் இது கவனத்தைப் பெற்றுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதாகத் தவெக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், புதிய அரசு பொறுப்பேற்றவுடன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கால அவகாசம் தேவைப்படுவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார். இதனால் இந்த மாதம் பணம் வருமா என்பதில் சந்தேகம் நீடித்தது.

அறிவிப்பு

திடீர் அறிவிப்பும் பணப்பரிமாற்றமும்

திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அவகாசம் தேவைப்படுவதால் மே மாதத் தொகை தாமதமாகும் என்று நேற்று செய்திகள் வெளியான நிலையில், இன்று காலை முதல் பயனாளிகளின் செல்போன்களுக்கு பணம் வரவு வைக்கப்பட்டதற்கான SMS-கள் வரத் தொடங்கியுள்ளன. தவெக அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே, முந்தைய அரசின் மக்கள் நலத்திட்டத்தைத் தடையின்றித் தொடர்ந்திருப்பது குடும்பத்தலைவிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மகளிர் உரிமைத் தொகை மட்டுமின்றி, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான 'தமிழ்ப் புதல்வன்' மற்றும் 'புதுமைப் பெண்' திட்டங்களின் கீழ் வழங்கப்படும் தலா ரூ.1,000 உதவித்தொகையும் நேற்று பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி வழங்கப்படும் இந்தத் தொகை, ஆட்சி மாற்றத்தின் காரணமாகச் சற்று தாமதமாகி 14-ம் தேதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement