NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'மக்களோடு மக்களாக சுற்றி பார்த்துவிட்டு செல்கிறேன்' என்று காவல்துறையிடம் கூறிய எளிமையான முதல்வர்
    இந்தியா

    'மக்களோடு மக்களாக சுற்றி பார்த்துவிட்டு செல்கிறேன்' என்று காவல்துறையிடம் கூறிய எளிமையான முதல்வர்

    'மக்களோடு மக்களாக சுற்றி பார்த்துவிட்டு செல்கிறேன்' என்று காவல்துறையிடம் கூறிய எளிமையான முதல்வர்
    எழுதியவர் Nivetha P
    Dec 31, 2022, 06:33 pm 0 நிமிட வாசிப்பு
    'மக்களோடு மக்களாக சுற்றி பார்த்துவிட்டு செல்கிறேன்' என்று காவல்துறையிடம் கூறிய எளிமையான முதல்வர்
    மாமல்லபுரம் சென்ற மத்திய பிரதேச முதல்வர்

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லப்புரத்திற்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது குடும்பத்தோடு நேற்று வருகை தந்துள்ளார். முன்னதாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடற்கரை கோயில் பகுதிக்கு வந்த அவரை தமிழக அரசு சார்பில் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் பூங்கொடுத்து வரவேற்றார். பிறகு சுற்றுலாத்துறை சார்பில் அவருக்கு மாமல்லப்புரம் வரலாற்று சின்னங்கள் குறித்த சுற்றுலா தகவல் புத்தகம் கொடுக்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்ட சிவராஜ் சிங் காவல்துறை அதிகாரிகளை அருகில் அழைத்து "சுற்றுள்ள வந்துள்ள மக்களை தொந்தரவு செய்ய வேண்டாம். மக்களோடு மக்களாகவே நான் சுற்றிப்பார்த்து விட்டு செல்கின்றேன்" என்று கூறியுள்ளார். பிறகு அவர் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்திற்குள் சென்று, பல்லவ மன்னர்களால் வடிவமைக்கப்பட்ட எழில்மிகு கோயில் தோற்றத்தை கண்டு ரசித்தார்.

    சுற்றுலா வந்த சில மத்திய பிரதேச மாநில மக்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட முதல்வர் சிவராஜ் சிங்

    இதனைத் தொடர்ந்து, அவருடன் இருந்த மாமல்லபுர சுற்றுலா வழிகாட்டி காதர் பாஷா என்பவர், அங்குள்ள சிற்பங்கள் குறித்தும், கடலோரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வாறு உருவாக்கப்பட்டது. உப்பு காற்றில் சிற்பங்கள் மற்றும் கோயில்கள் பாதிப்படையாமல் எவ்வாறு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது போன்றவைகளை அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எடுத்துரைத்தார். இறுதியாக சிவராஜ் சிங் அவர்கள் தனது குடும்பத்துடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். அப்போது அங்கு வந்த மத்திய பிரதேச சுற்றுலா பயணிகள் சிலர் அவர் அருகில் சென்று செல்பி எடுத்துக்கொண்டனர். அவரும் அவர்களுக்கு அனுமதி அளித்து, தனது மாநில மக்களை சந்தோஷபடுத்தினார். இவர் வருகையையொட்டி அங்குள்ள பகுதிகளில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் தலைமையில் பல போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.என்பது குறிப்பிட்டத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    மகாபலிபுரம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    வேங்கைவயல் சம்பவத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்த மனு தமிழ்நாடு
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியது - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    யூரோ கால்பந்து கோப்பை : இரண்டு புதிய சாதனைகளை படைத்த ரொனால்டோ கால்பந்து
    ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவு ஜப்பான்

    மகாபலிபுரம்

    வடமாநில வாலிபரை தாக்கிய 2 பேர் மாமல்லபுரம் அருகே கைது காவல்துறை
    மாமல்லபுரம் செல்ல தடை - தனியார் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய டிஎஸ்பி இந்தியா
    மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்தது மெரினா கடற்கரை

    தமிழ்நாடு

    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை கடலூர்
    தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு ஆஸ்திரேலியா
    ராகுல்காந்திக்கு சிறை தண்டனை - எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் காங்கிரஸ்
    வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர் ஸ்டாலின்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023