Loading...
விக்கெட் கீப்பிங்.. கேட்ச் பிடித்த நாய்! மலைப்பிரதேசத்தில் குழந்தைகள் ஆடிய வித்தியாசமான கிரிக்கெட்; வைரல் வீடியோ
மலைப்பகுதியில் குழந்தைகளுடன் கிரிக்கெட் ஆடிய நாய்

விக்கெட் கீப்பிங்.. கேட்ச் பிடித்த நாய்! மலைப்பிரதேசத்தில் குழந்தைகள் ஆடிய வித்தியாசமான கிரிக்கெட்; வைரல் வீடியோ

எழுதியவர் Sekar Chinnappan
Aug 07, 2026
07:16 pm

செய்தி முன்னோட்டம்

கிரிக்கெட் விளையாடப் போதிய வீரர்கள் இல்லாத போது, உள்ளூர் சிறுவர்கள் தங்கள் படைப்பாற்றலால் புதிய வழிகளைக் கண்டறிவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், மலைப் பகுதியில் வசிக்கும் ஒரு சிறுவர் குழு, தங்களின் கிரிக்கெட் ஆட்டத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்ட போது தங்கள் வளர்ப்பு நாய்களையே ஃபீல்டர்களாக சேர்த்துக்கொண்டுள்ள சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. பாறைகள் நிறைந்த மேடு பள்ளமான இடத்தில், இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் சிறுவர்கள் ஆடும் இந்த கிரிக்கெட் போட்டியில் இரண்டு நாய்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கெடுத்து விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாய்கள்

அற்புத விக்கெட் கீப்பிங் மற்றும் கேட்ச் பிடித்த நான்கு கால் வீரர்கள்

சாதாரண மைதானம் போல இல்லாமல் கரடுமுரடான பாறை நிலப்பரப்பில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

அதில் ஒரு நாய் விக்கெட் கீப்பர் இடத்தில் நின்று கொண்டு, பேட்ஸ்மேன் தவறவிடும் பந்தைத் துல்லியமாகத் தனது வாயால் கவ்விப் பிடிக்கிறது.

மற்றொரு நாய் சிறுவன் பந்தை அடித்தவுடன் பாறைகளின் மீது தாவிக்குதித்து ஓடிச் சென்று பந்தை எடுத்து வந்து பௌலரிடம் கொடுக்கிறது.

ஆட்டத்தின் உச்சக்கட்டமாக, ஒரு நாய் பேட்ஸ்மேன் அடித்த பந்தை காற்றில் தாவிப் பிடித்து பேட்ஸ்மேனை அவுட் ஆக்கி சிறுவனுக்கு அதிர்ச்சி அளித்தது பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

நெட்டிசன்கள் நெகிழ்ச்சி

இணையத்தைக் கட்டிப்போட்ட நெகிழ்ச்சியான வீடியோ

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்து கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

"வாழ்க்கையின் பிரீமியம் சந்தா இதுதான்" என்ற வரிகளுடன் பகிரப்பட்ட இந்த வீடியோவில், நாய்கள் தங்களின் பொறுப்பை மிகச் சரியாக உணர்ந்து விளையாடுவதாகப் பலரும் பாராட்டியுள்ளனர்.

குழந்தைகளுக்கும் நாய்களுக்கும் இடையிலான இந்த ஆழமான அன்பையும், மலைப் பிரதேசத்தின் அமைதியான இயற்கை அழகையும் கண்டு வியந்த இணையவாசிகள், தங்களின் சிறுவயது கிரிக்கெட் நினைவுகளை இணையத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT