
திருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பஞ்சபூத சிவ ஸ்தலங்களில் ஒன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்.
ஆண்டுதோறும் இந்த கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை காண பல ஊர்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருவதுண்டு.
இந்த ஆண்டிற்கான தீபத் திருவிழா, இன்று(நவம்பர் 17) காலை, கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காலை 5.45 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை ஓத, பக்தர்களின் அரோகரா முழக்கங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் கோவிலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து இம்மாதம், மாடவீதி உலாக்களும், தேரோட்டமும் நடைபெற்று, வரும் 26-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
திருவண்ணாமலை தீபத் திருவிழா துவங்கியது
#JustIn | திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலம்.
— Sun News (@sunnewstamil) November 17, 2023
அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது.#SunNews | #Tiruvannamalai pic.twitter.com/Wsg3lJI4G2