3 ஆண்டுகளில் 900 சட்டவிரோத கருக்கலைப்புகளை செய்த கர்நாடக மருத்துவர் கைது
செய்தி முன்னோட்டம்
கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 900 சட்டவிரோத கருக்கலைப்புகளை செய்த ஒரு மருத்துவர் மற்றும் அவரது ஆய்வக தொழில்நுட்ப வல்லுநரை பெங்களூர் காவல்துறை கைது செய்துள்ளது.
டாக்டர் சந்தன் பல்லால் மற்றும் அவரது லேப் டெக்னீஷியன் நிசார் ஆகியோர் மைசூரு மாவட்டத் தலைமையகத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சட்டவிரோத கருக்கலைப்புகளை செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கருக்கலைப்புக்கும் அவர்கள் ரூ.30,000 வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர்கள் இருவரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக, அந்த மருத்துவமனையின் மேலாளர் மீனா மற்றும் வரவேற்பாளர் ரிஸ்மா கான் ஆகியோர் இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டக்ஜ்வ்கிய
கடந்த மாதம் மைசூரில் பிடிபட்ட மோசடி கும்பல்
கடந்த மாதம் மைசூரு அருகே உள்ள மாண்டியாவில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை கருக்கலைப்புக்காக காரில் அழைத்துச் சென்று கொண்டிருந்த போது, சிவலிங்க கவுடா மற்றும் நயன் குமார் ஆகிய இரு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
அதன் மூலம், பெண் சுசு கொலை செய்து வந்த ஒரு கும்பலின் சட்டவிரோத நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்தது.
அந்த கும்பல், தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்த பிறகு, பணத்தை வாங்கி கொண்டு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து வந்ததை போலீசார் கண்டறிந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, கடந்த வாரம் டாக்டர் சந்தன் பல்லால் கைது செய்யப்பட்டார்.
இந்த மோசடியில் ஈடுபட்ட பிற சந்தேக நபர்களை பிடிக்க மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.