Loading...
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: ரூ.755 கோடி டெண்டரை வென்றது இந்த கடையா?
"தாய்மாமன் தங்க மோதிரம்" டெண்டரை ஜோய் ஆலுக்காஸ் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: ரூ.755 கோடி டெண்டரை வென்றது இந்த கடையா?

எழுதியவர் Venkatalakshmi V
Aug 21, 2026
03:17 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசின் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்குத் தேவையான தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான ரூ.755 கோடி மதிப்பிலான டெண்டரை பிரபல நகைக்கடை நிறுவனமான ஜோய் ஆலுக்காஸ் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் மற்றும் சீர் பெட்டகம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்காக ஜூலை 14 அன்று டெண்டர் கோரப்பட்டது. இந்த திட்டத்திற்காக மொத்தம் 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்கள் கோரப்பட்டிருந்ததாக செய்திகள் கூறுகின்றன. இந்த மோதிரத்தில் தங்கத்தின் தரம் 22 காரட் தூய்மை மற்றும் 916 ஹால்மார்க் தரச்சான்றிதழ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு, அதற்காக ஆண்டிற்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஏலம்

L1 ஏலதாரராக ஜோய் ஆலுக்காஸ் தேர்வு

இந்த டெண்டரில் பங்கேற்ற ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம், தங்கத்தின் சந்தை விலையை தவிர்த்து சேதாரம் மற்றும் இதர செலவுக் கட்டணங்களுக்குக் வெறும் 1 பைசா மட்டுமே எனக் குறிப்பிட்டிருந்தது.

மிகக் குறைந்த கட்டணத்தை குறிப்பிட்டதால், அந்நிறுவனம் எல் 1 (L1) ஏலதாரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு டெண்டர் வழங்கப்பட உள்ளது.

இந்த ஏலத்தில், உம்மிடி பங்காரு, GRT, மலபார் கோல்ட், சரவணா ஸ்டோர்ஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ் உள்ளிட்ட பிரபல நகைக்கடைகள் கலந்துகொண்டுள்ளன.

ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள். பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.

டெண்டர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT