
பிரதமர் மோடி சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலினை கொடியசைத்து துவக்கி வைத்தார்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் அதிவேகமான 'வந்தே பாரத்' ரயில் சேவைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.
இதனிடையே நாட்டின் 12வது வந்தே பாரத் ரயில் சென்னை-கோவை இடையே இயக்க முடிவு செய்யப்பட்டது.
தற்போது இதற்கான பணிகள் முடிந்த வெள்ளோட்டமும் பார்த்து முடித்த நிலையில், இந்த ரயில் சேவையினை இன்று(ஏப்ரல்.,8) பிரதமர் மோடி அவர்கள் சென்னை சென்ட்ரலில் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் தமிழக முதல்வர், ஆளுநர் ஆர்.என்.ரவி, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக ரயிலின் உள்ளே சென்று பார்வையிட்ட மோடி, அதில் பயணிக்க வந்திருந்த பள்ளி மாணவர்களுடன் அந்த ரயிலில் உள்ள வசதிகள் குறித்து கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. .
ட்விட்டர் அஞ்சல்
பிரதமர் மோடி வந்தே பாரத் ரயிலினை கொடியசைத்து துவக்கி வைத்தார்
#WATCH | Prime Minister Narendra Modi flags off Chennai-Coimbatore Vande Bharat Express in Chennai, Tamil Nadu
— ANI (@ANI) April 8, 2023
(Source: DD News) pic.twitter.com/YiZetP3FoQ