இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான அம்பேத்கரின் ராஜினாமா கடிதத்தை காணவில்லை
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான பி.ஆர்.அம்பேத்கரின் ராஜினாமா கடிதமானது அதிகாரபூர்வ பதிவுகளில் காணவில்லை என்னும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து என்.ஆர்.டி.ஐ. எழுப்பிய கேள்விக்கு மத்திய தகவல் ஆணையம் அண்மையில் பதிலளித்துள்ளது. அதன்படி, இந்திய அரசியலமைப்பு விவகாரங்கள் பிரிவில் தீவிரமாக விரிவான தேடுதல் நடத்தப்பட்ட நிலையிலும், ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று குடியரசுத்தலைவர் அலுவலகம் மத்தியத்தகவல் ஆணையத்திற்கு எழுத்துபூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக டாக்டர்.அம்பேத்கரின் ராஜினாமா கடிதத்தின் சான்றளிக்கப்பட்ட நகலைக்கோரி, தகவலறியும் உரிமைச்சட்டமான 2005ன்கீழ் மனுதாரர் மனுவினை தாக்கல் செய்தார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம், அமைச்சரவை செயலகம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றிற்கு மனுதாரர் கடிதம் எழுதி, அம்பேத்கர் தன் பதவியினை ராஜினாமா செய்ததன் காரணத்தை அறிய முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.