இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 89 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததாக கூறப்பட்டு வந்தது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 104ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தி ஒன்றாக உள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று ராஜஸ்தானில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 737ஆக அதிகரித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இந்தியாவின் தினசரி மற்றும் வாரந்தோறுமான பாதிப்பு விகிதம்
மேலும் இந்தியாவில் தினசரி பாதிப்பின் விகிதம் 0.06 சதவிகிதமாகவும், வாரந்தோறுமான பாதிப்பு விகிதம் 0.08 சதவிகிதமாகவும் உள்ளது என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவிகிதமாக பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பிற்காக இந்தியா முழுவதும் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 220.30 கோடியாக உள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் 2019ம் ஆண்டு பரவத்துவங்கிய கொரோனா பாதிப்பு அலைகள் சற்று ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் சீனாவில் உருநாறிய பிஎப்7 என்னும் கொரோனா பரவ துவங்கியுள்ளது. இது உலக நாடுகளுக்கும் பரவி வருகிறது என்று தகவல்கள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.