கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிலிப்கார்ட்டில் இளைஞர் ஒருவர் புளூடூத் காலர் மைக் ஹெட்போன் ஒன்றினை ஆர்டர் செய்துள்ளார். ரூ.1,350 ரூபாய் மதிப்புள்ள அந்த ஹெட் போன் டெலிவரி செய்யப்பட்ட நிலையில் போல்ட் என்னும் நிறுவனத்தின் அந்த ஹெட்போன் சவுண்ட் குவாலிட்டி மிக மோசமாக இருந்துள்ளது. இதனால் அவர் கடந்த மார்ச்15ம் தேதி ரீப்பிளேஸ்மெண்ட் செய்துதர கோரியுள்ளார். தொடர்ந்து அப்பொருளை அவர் மாற்றித்தருமாறு கேட்டுள்ள நிலையில் பிலிப்கார்ட் கஸ்டமர் சேவை மையத்தில் இருப்போர் இவருக்கு சரியான பதிலினை கூறவில்லை என்று தெரிகிறது. மேலும் ரிட்டர்ன் போட்ட பொருளுக்கு கேன்சல் என்று மெசேஜ் வந்துள்ளது. இதனை கண்டு அந்த இளைஞர் கடுப்பாகியுள்ளார். மீண்டும் அந்நிறுவன கஸ்டமர்கேர் மையத்தினை தொடர்பு கொண்டுள்ளார்.
போலி பொருட்கள் விற்பதாக சந்தேகம்
அந்த அழைப்பில் அவர், பல வருடங்களாக உங்கள் நிறுவனத்தின் மூலம் பல பொருட்களை வாங்கியுள்ளேன். அதனை போல்தான் ரூ.1,350 கொடுத்து போல்ட் நிறுவன ப்ளூடூத் ஹெட்செட் வாங்கினேன். அதன் சவுண்ட்குவாலிட்டி சரியில்லாத காரணத்தினால் தான் ரிட்டர்ன் போட்டேன். ஆனால் நீங்கள் மாற்றித்தர முடியாது என்று கூறியுள்ளீர்கள். போல்ட் கம்பனிக்கு நீங்கள் உறுதுணையாக உள்ளீர்கள் என்று சந்தேகம் எழுகிறது என்று பேசியுள்ளார். மேலும், இதற்கு தீர்வு காணாமல் நான் விடப்போவதில்லை. பல நிறுவனங்களின் பெயர்களில் நீங்கள் போலிப்பொருட்களை விற்பனை செய்துவருகிறீர்கள் எனவும் சந்தேகம் வருகிறது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். பின்னர் ஆத்திரத்தில் அந்த ஹெட்போனை தீயிட்டு கொளுத்தி வீடியோவினை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாக பரவிவருகிறது குறிப்பிடத்தக்கது.