திருக்குறள் மீதுள்ள ஆர்வம் - புதுவித கூகுள் டூடூலை வடிவமைத்த வாலிபர்
திருவள்ளுவர் தினத்தன்று திருவள்ளுவருக்கு கூகுள் டூடூல் வெளியிட வலியுறுத்தி 'சுகர் ஆர்ட்' முறையில், ஓசூர் பகுதியை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியரான 33 வயது லூகாஸ் ஒரு கற்பனையான கூகுள் டூடூலை வடிமைத்துள்ளார். திருக்குறள் ஆர்வலரான இவர் 5,000க்கும் மேற்பட்ட கூகுள் டூடூலை வரைந்து பார்த்து, இதுவரை வந்த எந்தவொரு டூடூல் மாதிரியும் இல்லாமல் தனித்தன்மை வாய்ந்த டூடூலை வடிவமைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த டூடூல் திருக்குறளையும் வெளிப்படுத்துமாறு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முதல் ஜி என்னும் எழுத்தில் திருக்குறள் என்ற வார்த்தை இருக்குமாறும், ஓ என்னும் எழுத்தில் அறம் என்ற வார்த்தையும், அடுத்த ஓ என்னும் எழுத்தில் பொருள் என்னும் வார்த்தை இருக்குமாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்திய ஞானி திருவள்ளுவருக்கு இன்டர்நேஷனல் அல்லது இந்தியன் டூடூல் வெளியிட வலியுறுத்தல்
தொடர்ந்து, ஜி என்னும் எழுத்தில் இன்பம் என்னும் வார்த்தையும், எல் இருக்கவேண்டிய இடத்தில் திருவள்ளுவரின் உருவத்தை 'மினிமலிஸ்டிக் ஆர்ட்' முறைப்படி அவர் அமைத்துள்ளார். மேலும் இ என்னும் எழுத்தும், அதிலுள்ள மற்ற எழுத்துக்களும் கூகுள்லோகோவில் உள்ள நிறங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. முன்னதாக, கூகுள் நிறுவனம் கன்பியூசியஸ், ஷேக்ஸ்பியர், லியோ டோல்ஸ்டோரி போன்ற பல உலக அறிஞர்களுக்கு டூடூல்ஸ் வெளியிட்டு அவர்களை கவுரப்படுத்தியுள்ளது. அப்படி பார்க்கையில், மேற்கண்டவர்களோடு ஒப்பிட்டு பார்க்கும்பொழுது திருவள்ளுவர் எதிலும் குறைந்தவர் இல்லை என்று அந்த வாலிபர் கூறியுள்ளார். அதனால் திருக்குறள் தந்த இந்தியஞானி திருவள்ளுவருக்கும் இன்டர்நேஷனல் அல்லது இந்தியன் டூடூல் வெளியிடவேண்டும் என்று அவர் தனது டூடூல் ப்ரபோஸ்களை கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.