நிர்வாக காரணங்களுக்காக விடுமுறை தேதி மாற்றம் - உணவுப்பொருள் வழங்கல் துறை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கமாக அளித்துள்ளது. இவற்றை ரேஷன் கடைகளில் மக்கள் பெற்றுக்கொள்ள முன்னதாக டோக்கனும் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக ரேஷன் கடைகள் மாதத்தில் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகளில் செயல்படாது. ஆனால் தற்போது பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக இன்றும் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி, இந்த நாளின் விடுமுறையை ஈடு செய்ய ஜனவரி 27ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
நிர்வாக காரணமாக விடுமுறை தேதியில் மாற்றம்
இதனை தொடர்ந்து, ஜனவரி 27ம்தேதி விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், நிர்வாக காரணமாக விடுமுறை தேதியை மாற்றி ஜனவரி 16ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை உணவுப்பொருள் வழங்கல் துறை அண்மையில் செய்துள்ளது. கடந்த 9ம்தேதி முதல் தமிழக அரசு பொதுமக்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரொக்கப்பணம் முதலியவற்றை பொங்கல் பரிசுத்தொகுப்பாக வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு திமுக பொறுப்பேற்ற முதல் வருடத்தில் வந்த பொங்கல் பண்டிகைக்கு பல வித பரிசு பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டது. அதில் ஏகப்பட்ட புகார்கள் வந்த நிலையில், இந்தாண்டு தமிழக அரசு பரிசு பொருட்களை குறைத்து ரொக்க பணத்தை அளிக்கிறது என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.