LOADING...
தன்னை விட அழகாக இருந்ததாக 4 குழந்தைகளைக் கொன்ற ஹரியானா பெண்: சொந்த மகனையும் கொன்ற கொடூரம்
தன்னை விட அழகாக இருந்ததாக 4 குழந்தைகளைக் கொன்ற ஹரியானா பெண்

தன்னை விட அழகாக இருந்ததாக 4 குழந்தைகளைக் கொன்ற ஹரியானா பெண்: சொந்த மகனையும் கொன்ற கொடூரம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 04, 2025
02:01 pm

செய்தி முன்னோட்டம்

ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் தன் சொந்த மகன் உட்பட நான்கு குழந்தைகளை சாவகாசமாகக் கொலை செய்த 34 வயதுப் பெண் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். பூனம் என்ற அப்பெண், தன்னைவிட அழகாக இருக்கும் குழந்தைகளை பார்த்து ஏற்பட்ட பொறாமையே இந்தக் கொடூரச் செயல்களுக்குக் காரணம் எனப் போலீசாரிடம் அதிர்ச்சிகரமான வாக்குமூலம் அளித்துள்ளார்.

வாக்குமூலம்

தொடர் கொலைகளும் ஒப்புதல் வாக்குமூலமும்

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) அன்று, நௌல்தா கிராமத்தில் ஒரு திருமண நிகழ்வில் 6 வயதுச் சிறுமி விதி என்பவர் நீரில் மூழ்கிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். குழந்தையின் தலையில் காயங்கள் இருந்ததைக் கண்ட மருத்துவர்கள், இது கொலை என்பதை உறுதி செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். சிறுமியின் அத்தையான பூனத்தின் பதில்களில் முரண்பாடுகளைக் கண்டறிந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விதி உட்பட, இதற்கு முன் நடந்த மூன்று குழந்தைக் கொலைகளையும் தானே செய்ததாகப் பூனம் ஒப்புக்கொண்டார்.

காரணம்

சொந்த மகனைக் கொன்றதன் காரணம்

போலீஸ் விசாரணையில், பூனம் 2023 ஆம் ஆண்டு தனது மைத்துனரின் 9 வயது மகள் இஷிகா என்பவரைக் கொன்றதை முதலில் ஒப்புக்கொண்டார். பின்னர் அதே ஆண்டு, தான் செய்த கொலையைச் சொந்த மகன் சுபம் (3 வயது) பார்த்துவிட்டதால், உண்மை வெளிவந்துவிடும் என்ற அச்சத்தில் அவனையும் நீரில் மூழ்கடித்துக் கொன்றதாகத் தெரிவித்துள்ளார். அதன்பின், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது உறவினரின் 6 வயது மகள் ஜியா என்பவரையும் பூனம் கொலை செய்துள்ளார். இந்தப் பெண் தனது நான்கு கொலைகளையும் ஒரே முறையிலேயே செய்துள்ளார். முன்பு குடும்பத்தினர் இவற்றை விபத்துகள் என்று நம்பியிருந்த நிலையில், பூனத்தின் ஒப்புதல் வாக்குமூலம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement