Loading...
5 நாட்களாகத் தொடர்ந்து கொப்பளிக்கும் கிணற்று நீர்! குஜராத்தின் மோர்பி கிராமத்தில் திரண்ட மக்கள்; அதிகாரிகள் விளக்கம்
குஜராத்தின் மோர்பியில் அதிசயக் கிணறு

5 நாட்களாகத் தொடர்ந்து கொப்பளிக்கும் கிணற்று நீர்! குஜராத்தின் மோர்பி கிராமத்தில் திரண்ட மக்கள்; அதிகாரிகள் விளக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 07, 2026
12:15 pm

செய்தி முன்னோட்டம்

குஜராத் மாநிலம் மோர்பி தாலுகாவில் உள்ள வீர்பர்தா கிராமத்தைச் சேர்ந்த பிராஞ்ஜீவன் சடாரியா என்பவரது விவசாய நிலத்தில் அமைந்துள்ள 18 அடி ஆழக் கிணற்றில், கடந்த ஐந்து நாட்களாக நீர் தொடர்ந்து அலைபோல கொப்பளித்து வெளியேறி வருகிறது. 3 மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட இந்தக் கிணற்றில் ஆகஸ்ட் 2 முதல் தொடர்ச்சியாக ஏற்படும் இந்த விசித்திர நிகழ்வைக் காண சுற்றியுள்ள கிராம மக்களும் நெடுஞ்சாலையில் செல்வோர் திரண்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆய்வு

நில அதிர்வு பயமும் நிபுணர்களின் முதல் கட்ட ஆய்வும்

கிணற்றில் நீர் நிற்காமல் கொப்பளிப்பதைப் பார்த்த மக்கள், இது நிலநடுக்கம் அல்லது பூகம்ப நில அதிர்வின் அறிகுறியாக இருக்குமோ என்று அச்சமடைந்தனர்.

இருப்பினும், சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்த மாவட்ட புவியியல் வல்லுநர் ஜே.எஸ்.வதேர், அப்பகுதியில் எந்தவித நில அதிர்வுகளோ அல்லது செயலில் உள்ள பிளவுப் பாறை மண்டலங்களோ இல்லை என்பதால் நிலநடுக்க அச்சத்தை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

இது முற்றிலும் ஒரு இயற்கையான புவி-நீரியல் சார்ந்த இயற்பியல் நிகழ்வே என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

விளக்கம்

கொப்பளிப்பிற்கான அறிவியல் காரணம் மற்றும் அதிகாரிகளின் விளக்கம்

அண்மையில் பெய்த கனமழையால் நிலத்தடி நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்துள்ளது.

இதனால் பாறை இடுக்குகளில் தேங்கியிருந்த காற்று பெருமளவில் வெளியேற்றப்படும்போது, அது கிணற்று நீரை மேல்நோக்கித் தள்ளி இதுபோன்று அலைபோல கொப்பளிக்க வைக்கிறது என்று புவியியலாளர்கள் கணித்துள்ளனர்.

இருப்பினும், நிலத்தடி நீர்மட்ட மாறுபாடுகள் குறித்த முழுமையான அறிவியல் பூர்வ காரணங்களைக் கண்டறிய காந்திநகரில் இருந்து வல்லுநர்கள் அடங்கிய ஆய்வுக்குழு விரைந்து வந்து ஆய்வு செய்ய உள்ளதாக மோர்பி மாவட்ட ஆட்சியர் சுப்னில் கரே தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT