7 வது முறையாக பட்ஜெட்-ஐ தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
செய்தி முன்னோட்டம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 7வது பட்ஜெட் உரையை துவங்கினார்.
முன்னதாக நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சியின் கீழ் முதல் முழு பட்ஜெட்டில், எதிர்பார்ப்புகள் ஏற்கனவே எகிறியுள்ளன.
பட்ஜெட்டுக்கு முன்னதாக, இந்த பட்ஜெட் 'விக்சித் பாரத்' அடித்தளத்தை அமைக்கும் என்று பிரதமர் உறுதிபட கூறினார்.
அதன்படி, இன்று நிதியமைச்சர் விக்சித் பாரத்துக்கான ஒன்பது முன்னுரிமைகளை பற்றி தெரிவித்தார்.
அதில், இந்தியாவில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், அதன் வளர்ச்சியை உந்துவதற்கும் ஒன்பது முன்னுரிமைகளை அறிவித்துள்ளார்.
அவை வேளாண்மை, வேலைவாய்ப்பு, உள்ளடக்கிய வளர்ச்சி, உற்பத்தி மற்றும் சேவைகள், நகர்ப்புற வளர்ச்சி, ஆற்றல், உள்கட்டமைப்பு, புதுமை, R&D மற்றும் NexGen சீர்திருத்தங்கள் ஆகியவை ஆகும்.
ட்விட்டர் அஞ்சல்
பட்ஜெட் உரையாற்றும் நிதியமைச்சர்
#WATCH | #Budget2024 | Finance Minister Nirmala Sitharaman says, "India's economic growth continues to be the shining exception and will remain so in years ahead. India's inflation continues to be low and stable moving towards the 4% target..." pic.twitter.com/X7y5KoyWcV
— ANI (@ANI) July 23, 2024