100% EVM-VVPAT சரிபார்ப்பு கோரும் அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்காளர் சரிபார்க்கக்கூடிய VVPAT சீட்டுகள் மூலம் முழுமையாக சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது. 2 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. "மீண்டும் வாக்குச் சீட்டுகளைக் கொண்டுவருவது தொடர்பான அனைத்து மனுக்களையும் நாங்கள் நிராகரித்துவிட்டோம்." விசாரணையில் நீதிபதி கண்ணா தெரிவித்தார். ஏடிஆர்-ஐ, அபய் பக்சந்த் சாஜேத் மற்றும் அருண் குமார் அகர்வால் ஆகியோர் இந்த ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக ஏப்ரல் 18 அன்று, விசாரணைக்குப் பிறகு மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம், கடந்த புதன்கிழமை, EVMகளின் செயல்பாடு தொடர்பான அதன் ஐந்து கேள்விகளுக்கு விளக்கம் அளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) கேட்டுக் கொண்டது.
அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி
VVPAT CASE : 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணக்கோரிய மனுக்கள் தள்ளுபடி! உச்சநீதிமன்றம் அதிரடி #India #election #politics #vvpat #evm #bjp #congress #supremecourt #asianetnewstamil https://t.co/hdofm9MiqJ— Asianetnews Tamil (@AsianetNewsTM) April 26, 2024