அடுத்த செய்திக் கட்டுரை

ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியேற்பு
எழுதியவர்
Nivetha P
Mar 10, 2023
11:21 am
செய்தி முன்னோட்டம்
ஈரோடு இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 27ம் தேதி நடத்தப்பட்டு அதன் முடிவுகள் மார்ச் 2ம் தேதி வெளியிடப்பட்டது.
இதில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 66 ஆயிரத்து 21 ஓட்டுகள் அதிகமாக பெற்று மாபெரும் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து அவர் இன்று(மார்ச்10.,) எம்.எல்.ஏ.வாக பதவியேற்கிறார்.
அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியேற்பு
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று பதவியேற்பு @EVKSElangovan | #evkselangovan | #Congress | #ErodeEastByPolls | #Malaimurasu | pic.twitter.com/Lytu2fXMBz
— Malaimurasu TV (@MalaimurasuTv) March 10, 2023