LOADING...
அதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு: எடப்பாடி பழனிசாமியின் முக்கிய அறிவிப்புகள்
அதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு

அதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு: எடப்பாடி பழனிசாமியின் முக்கிய அறிவிப்புகள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 04, 2026
02:33 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ஜனவரி 17-ல் முதல்கட்ட வாக்குறுதிகளை அறிவித்திருந்த நிலையில், இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களை கவரும் வகையில் அமைந்துள்ளன.

வாக்குறுதிகள்

அதிமுகவின் முக்கிய வாக்குறுதிகள்

முதியோர்களுக்கான மாத ஓய்வூதியம் தற்போதுள்ள நிலையில் இருந்து ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும். அதேபோல், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான உதவித் தொகையும் ரூ. 2,000 ஆக அதிகரிக்கப்படும். மாணவர்களின் பெரும் சுமையாக இருக்கும் வங்கி கல்வி கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, அந்தத் தொகையை அரசே ஏற்கும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் மற்றும் காயமடைவோருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். சிறுபான்மையின பெண்கள் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

முதல்கட்ட வாக்குறுதிகள்

முதல்கட்ட வாக்குறுதிகள் ஒரு பார்வை

ஏற்கனவே அதிமுக சார்பில் மகளிர் உரிமை தொகை ரூ. 2,000, ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம், 150 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் 5 லட்சம் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திமுகவின் 'திராவிட மாடல்' திட்டங்களுக்குப் போட்டியாக, அதிமுகவும் தனது நலத்திட்டங்களை அடுக்கி வருவது தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement