கொரோனாவுக்கு பயந்து 2 ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே இருந்த குடும்பத்தினர்
நாகர்கோவில் மாவட்டத்தில் கொரோனா பயம் காரணமாக ஒரு குடும்பத்தினர் 2 ஆண்டுகள் தங்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்துள்ள விசித்திர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குடும்பம் குறித்து அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்ததன் பேரில் சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி தலைமையிலான அதிகாரிகள் அந்த வீட்டிற்கு சென்று அங்கிருந்தோரிடம் விசாரணை நடத்தியுள்ளார்கள். மூன்று பெண்கள் மற்றும் ஒரு முதியவர் வாழ்ந்து வரும் அந்த குடும்பத்தினரை வெளியில் வரும்படி கேட்கப்பட்ட நிலையில் அவர்கள் ஜன்னலை திறந்து எட்டி பார்ப்பதும், செல்போனில் படம் எடுப்பது என்று போக்கு காட்டியுள்ளார்கள். இதனால் அதிகாரிகள் வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்றுள்ளார்கள். அப்போது இரும்பு கேட்டினை பூட்டிகொண்டு நின்ற அவர்களை பொது வாழ்க்கைக்கு திரும்பும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டார்கள்.
ஆன்லைனில் பொருட்களை வாங்கிக்கொண்டு உயிர்வாழும் குடும்பம்
இதனால் அதிகாரிகள் வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்றுள்ளார்கள். அப்போது இரும்புக்கேட்டினை பூட்டிகொண்டு நின்ற அவர்களை பொது வாழ்க்கைக்கு திரும்பும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அப்பெண் மறுத்துவிட்டார். இதற்கிடையே அவரின் ஒரு மகள் அங்கு நடக்கும் எதனையும் புரிந்துகொள்ளும் மனநிலையில் இல்லாமல் கையில் சிறிய போனினை வைத்து கொண்டு சுற்றி சுற்றி புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார். இதனை கண்ட அதிகாரிகள் அந்த குடும்பத்தினை வெளியில் கொண்டு மனநிலை குறித்த மருத்துவ பரிசோதனையினை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வீட்டிற்குள்ளேயே அடைந்துள்ள இந்த குடும்பம் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் வாங்கி கொள்கிறார்கள். இவர்களுக்கு சொந்தமாக ஏராளமான கடைகள் உள்ளது. அந்த வாடகை பணத்தினை கொண்டே இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.