NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருபாய் அம்பானி நினைவு இல்லத்திற்கு செல்ல இவ்வளவு தானா கட்டணம்? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருபாய் அம்பானி நினைவு இல்லத்திற்கு செல்ல இவ்வளவு தானா கட்டணம்? 
    திருபாய் அம்பானி நினைவு இல்லம்

    திருபாய் அம்பானி நினைவு இல்லத்திற்கு செல்ல இவ்வளவு தானா கட்டணம்? 

    எழுதியவர் Arul Jothe
    May 23, 2023
    05:27 pm

    செய்தி முன்னோட்டம்

    குஜராத்தின் சோர்வாட் என்ற கிராமத்தில், 100 ஆண்டுகளுக்கும் பழமையான வீடு ஒன்று அம்பானி குடும்பத்தாருக்கு உள்ளது.

    தற்போது 'திருபாய் அம்பானி மெமோரியல் ஹவுஸ்' என்று அழைக்கப்படும் இந்த வீடு, சமீபத்தில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.

    அதன் நுழைவு கட்டணம் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. அது பற்றி கட்டுரையின் இறுதியில் தெரிந்து கொள்ளுங்கள்.

    உலக பணக்காரர்களில் ஒருவரான அம்பானி குழுமத்தின் ஆரம்ப வித்தான திருபாய் அம்பானி, மும்பையில் தனது சாம்ராஜ்யத்தை நிறுவுவதற்கு முன்னர், இந்த வீட்டில் தான் வாழ்ந்து வந்தார்.

    தற்போதும் அந்த வீடு பழமை மாறாமல், பாரம்பரிய குஜராத்தி பாணியில் கட்டப்பட்ட இரண்டு மாடி மாளிகையாகவும், அழகிய நீற்றுகளுடன் கூடிய நந்தவனங்களுடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    Ambani

    திருபாய் அம்பானி நினைவு இல்லம்

    தொழிலதிபர் ஆன பிறகும், திருபாய் அம்பானியும், அவரது மனைவியும் இந்த பூர்வீக வீட்டிற்கு வருவதுண்டு.

    முகேஷ் அம்பானியின் குழந்தைப் பருவ நினைவாக இருக்கும் இந்த இல்லம், புனரமைக்கப்பட்டு, 2011 இல் திறக்கப்பட்டது.

    குடும்பத்தின் ஆன்மிக குருவான ரமேஷ்பாய் ஓசா இந்த வீட்டை முறையாக திறந்து வைத்தார்.

    இந்த வீட்டை பாதுகாக்கவும், புதுப்பிக்கவும் முகேஷ் அம்பானி பெரும் தொகையை முதலீடு செய்தார்.

    திங்கட்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும், சுற்றுலாப் பயணிகள் வீட்டிற்கு வருகை தரலாம்.

    பார்வையிடும் நேரம்: காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை.

    மேலும் திருபாய் அம்பானியின் இந்த வீட்டிற்குள் நுழைவதற்கு, வெறும் 2 ரூபாய் மட்டுமே கட்டணம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குஜராத்

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    குஜராத்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! தேர்தல்
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேர்தல்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? இந்தியா
    இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்கள் கைது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025