Loading...
தவெக அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய திமுக எம்பி கனிமொழி எம்பி: சொந்த கட்சியினருக்கு குட்டு
பெண்கள் எதிர்கொள்ளும் அநாகரிகத் தாக்குதல்களுக்கு திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்

தவெக அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய திமுக எம்பி கனிமொழி எம்பி: சொந்த கட்சியினருக்கு குட்டு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 24, 2026
12:17 pm

செய்தி முன்னோட்டம்

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் நடை, உடை மற்றும் தனிப்பட்ட தோற்றம் குறித்து பொதுவெளியில் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில், அரசியல் கடந்து பெண்கள் எதிர்கொள்ளும் இத்தகைய அநாகரிகத் தாக்குதல்களுக்கு திமுக எம்பி கனிமொழி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். தமிழகத் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல் அமைச்சர் கீர்த்தனாவின் உடைகள், பேச்சு நடை மற்றும் தோற்றம் குறித்துச் சமூக வலைதளங்களில் கேலி கிண்டல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதனிடையே, இணையத்தில் பரவிய போலி வீடியோ ஒன்று குறித்து விளக்கமளித்த அமைச்சர், "அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல; ஒருவேளை நானாகவே இருந்தாலும், ஒரு பெண்ணின் உடை மற்றும் மகிழ்ச்சி ஏன் பொதுவெளியில் விசாரணைக்குரிய பொருளாக மாற்றப்படுகிறது?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

கேலி பேச்சு

திமுக எம்பி துரை சந்திரசேகரின் பேச்சுக்கு எதிர்ப்பு

இந்நிலையில், தஞ்சையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், அமைச்சர் கீர்த்தனாவை ஏகவசனத்தில் விமர்சித்துப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆளுங்கட்சி அமைச்சராக இருந்தாலும், பெண் அரசியல் தலைவர்கள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்களுக்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தனர்.

இச்சம்பவம் குறித்துச் சமூக வலைதளத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள கனிமொழி, ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் இயங்கும் பெண்களைக் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களே அவர்களின் தோற்றம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதாகச் சாடினார்."

"பெண்களின் உடடையையும் தோற்றத்தையும் வைத்து விமர்சிப்பது பிற்போக்குத்தனமான மனநிலையின் வெளிப்பாடு. பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் கட்சி வேறுபாடின்றி இத்தகைய மலினமான தாக்குதல்களைக் கடந்து வெற்றி பெற வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT