Loading...
மாநிலத்தின் கடன்சுமை அதிகம்! அரசு கார் திமுக எம்எல்ஏக்களுக்கு வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
அரசு கார் திமுக எம்எல்ஏக்களுக்கு வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

மாநிலத்தின் கடன்சுமை அதிகம்! அரசு கார் திமுக எம்எல்ஏக்களுக்கு வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 21, 2026
11:42 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு கடும் நிதி நெருக்கடியிலும் நிதிப் பற்றாக்குறையிலும் தவித்து வருவதாக முதலமைச்சரே சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் சலுகை தேவையற்ற ஒன்று என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் கடன் சுமையை கருத்தில் கொண்டு, திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசு வழங்கும் புதிய காரை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

புதிய வாகனங்கள்

சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களுக்கான புதிய வாகன அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, மக்கள் பிரதிநிதிகள் தங்களது தொகுதிகளுக்கு சென்று களப்பணியாற்றுவதற்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் கார் மற்றும் ஓட்டுநர் செலவுகளுக்காக மாதம் ரூ.75,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, மக்கள் வரிப்பணத்தில் இதுபோன்ற ஆடம்பர சலுகைகள் தேவையா என்ற விவாதங்கள் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் தீவிரமாக எழத் தொடங்கின.

திமுக நிலைப்பாடு

மக்கள் வரிப்பணத்தை சேமிக்க திமுக எடுத்த நிலைப்பாடு

இதுகுறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "ஒருபுறம் மாநில அரசு கடன் சுமையில் இருப்பதாகக் கூறிக்கொண்டே, மறுபுறம் எம்எல்ஏக்களின் ஆடம்பரத்திற்காக மக்கள் வரியிலிருந்து பல கோடி ரூபாயை செலவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது" எனக் குறிப்பிட்டார்.

பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஏற்கெனவே சொந்தமாக வாகனங்கள் இருப்பதால், இந்த மக்கள் பணத்தை சமூகப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம் என அவர் வலியுறுத்தினார்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT