Loading...
80வது சுதந்திர தினம்: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதல்வர் விஜய்
சென்னை கோட்டையில் முதன்முறையாக தேசியக் கொடி ஏற்றிய முதல்வர் விஜய்

80வது சுதந்திர தினம்: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதல்வர் விஜய்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 15, 2026
08:58 am

செய்தி முன்னோட்டம்

இந்திய நாட்டின் 80வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் சனிக்கிழமை அன்று மிகுந்த உற்சாகத்துடனும் கோலாகலத்துடனும் நடைபெற்று வருகின்றன. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதேபோல, தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் சுதந்திர தின விழா சிறப்பான முறையில் நடைபெற்றது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளப் பகுதிக்கு வருகை தந்த தமிழக முதல்வர் விஜய், அங்கு அணிவகுத்து நின்ற காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சுதந்திர தின விழாவைத் தொடங்கி வைத்தார்.

கொடியேற்றம்

சென்னை கோட்டையில் முதல்வர் விஜய் கொடியேற்றம்

அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

முதல்வர் பொறுப்பேற்ற பிறகு புனித ஜார்ஜ் கோட்டையில் அவர் தேசியக் கொடியை ஏற்றுவது இதுவே முதன்முறையாகும்.

கம்பீரமாகப் பறந்த மூவர்ணக் கொடிக்கு முதல்வர் மற்றும் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

நாட்டின் 80வது சுதந்திர தினத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வு அமைந்ததுடன், அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் முதல்வர் தனது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

சிறப்பு விருந்தினர்கள்

சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பெற்றோரின் பங்கேற்பு

சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற இந்தச் சுதந்திர தின விழாவில் பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

குறிப்பாக முதல்வர் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் நேரில் வருகை தந்து விழாவைக் கண்டுகளித்தனர்.

அவர்களுடன் பிரபல நடிகை திரிஷா உள்ளிட்ட திரைத்துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இவர்களுடன் அரசு உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு விழாவ சிறப்பித்தனர்.

ADVERTISEMENT