LOADING...
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அளித்த 4 அதிரடி வாக்குறுதிகள்
முதல்வர் ஸ்டாலின் அளித்த 4 அதிரடி வாக்குறுதிகள்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அளித்த 4 அதிரடி வாக்குறுதிகள்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 16, 2026
09:03 am

செய்தி முன்னோட்டம்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு நான்கு மிகமுக்கியமான வாக்குறுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். திருக்குறளை மேற்கோள் காட்டி அவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து வரும் திருவள்ளுவர் தினத்தில், மனிதநேயம் மற்றும் அறிவாற்றலை அடிப்படையாகக் கொண்ட தனது ஆட்சியின் இலக்குகளை முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம்" ஆகிய நான்கும் ஒரு சிறந்த ஆட்சியாளருக்குத் தேவை என்ற வள்ளுவரின் வரிகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்குறுதிகள்

முதல்வர் அளித்த 4 வாக்குறுதிகள்

1. துணிச்சல்: சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராக சமரசமின்றிப் போராடும் துணிச்சல் தொடரும். 2. மனிதநேயம்: வறியோர் மற்றும் எளியோரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான மனிதாபிமானத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். 3. அறிவாற்றல்: இளைய தலைமுறையினரின் கல்வி மற்றும் அறிவாற்றலை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். 4. மகளிர் மேம்பாடு: தொழில் வளர்ச்சி மற்றும் மகளிர் முன்னேற்றத்திற்குத் தேவையான ஊக்கமளிக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தனது ஆட்சியின் அடிநாதமாக இந்த நான்கு அம்சங்களே இருக்கும் என முதல்வர் உறுதியளித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement