Page Loader
இந்தியாவிலேயே சென்னை மாநகரம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - மு.க.ஸ்டாலின் 
இந்தியாவிலேயே சென்னை மாநகரம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - மு.க.ஸ்டாலின்

இந்தியாவிலேயே சென்னை மாநகரம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - மு.க.ஸ்டாலின் 

எழுதியவர் Nivetha P
Apr 20, 2023
06:22 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான கொள்கை விளக்கக்குறிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னை நகரம் இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என தேசியக்குற்ற ஆவணக்காப்பகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசியஅவர், காவல்துறை இயக்குனர் தலைமையில் பெருநகர சென்னை காவல்துறை இயங்கி வருகிறது. அதன்படி, 5 கூடுதல் காவல் ஆணையாளர்கள், 7 காவல் இணை ஆணையர்கள் மற்றும் 31 காவல் துணைஆணையாளர்கள் ஆகியோர் அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். மேலும் 102 உள்ளூர் காவல் நிலையங்கள், 37 அனைத்து மகளிர் காவல்நிலையங்கள், 56 போக்குவரத்து காவல் நிலையங்கள் மற்றும் 24 தனிப்பிரிவுகளுடன் 23,791 காவலர்கள் சென்னை பெருநகர காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்கள் என்று கூறினார்.

தமிழ்நாடு

போதை மருந்துகளுக்கு எதிரான நடவடிக்கையில் 2022ம் ஆண்டில் 860 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

தொடர்ந்து பேசியஅவர், நேர்மையான அர்ப்பணிப்பு மற்றும் சீரிய காவல் பணி ஆகியவற்றின் காரணமாகவே சென்னை நகரம் இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், போதை மருந்துகளுக்கு எதிரான நடவடிக்கையின் கீழ் 2022ம் ஆண்டில் 860 வழக்குகள் பதிவுச்செய்யப்பட்டு, 1,537எதிரிகள் கைதுச்செய்யப்பட்டு, 109வாகனங்கள் மற்றும் ரூ.4.01கோடி மதிப்பிலான 1665.8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருட்களுக்கு எதிரான மன்றங்கள் அமைக்கப்பட்ட 'எனக்கு வேண்டாம்' என்னும் வில்லைகள் 50,000மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 5ம் நிதியாண்டில் குற்றங்கள் மற்றும் குற்றவியல்களை கண்டுபிடிக்கும் வலைப்பின்னல் அமைப்பு 2.0திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு ரூ.124.38கோடி ரூபாய் நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.