ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது
275 பேரைக் கொன்ற பாலசோர் ரயில் விபத்து "அலட்சியத்தால்" ஏற்பட்டது என்று ஒடிசா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த விசாரணை விரைவில் மத்திய புலனாய்வுப் பிரிவினரிடம்(சிபிஐ) ஒப்படைக்கப்படும். "தற்போதைக்கு, எந்த ரயில்வே ஊழியர்களின் மீதும் குற்றம் கண்டறியப்படவில்லை. இது விசாரணையின் போது கண்டறியப்படும்" என்று முதல் தகவல் அறிக்கையில்(FIR) கூறப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று நேற்று இந்திய ரயில்வே கோரிக்கை விடுத்திருந்தது. மேலும், ரயில்கள் இருப்பதைக் கண்டறியும் எலக்ட்ரானிக் இன்டர்லாக் சிஸ்டம் தவறாக கையாளப்பட்டிருக்கலாம் என்றும் இந்திய ரயில்வே கூறி இருக்கிறது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பான "கவாச்" விபத்து நடந்த பாதையில் இல்லை.
ரயில்வே போலீஸாரிடம் இருக்கும் வழக்கு நாளை சிபிஐக்கு மாற்றப்படும்
அப்படியே அது நடைமுறையில் இருந்திருந்தாலும், இதுபோன்ற விபத்தைத் தடுக்க இந்த அமைப்பு உதவியாக இருந்திருக்காது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளை சிபிஐ குழு விபத்து நடந்த இடத்திற்கு சென்று, தனது விசாரணையை தொடங்கும். மேலும், கட்டாக்கில் உள்ள ரயில்வே போலீஸாரிடம் இருக்கும் வழக்கு நாளை சிபிஐக்கு மாற்றப்படும். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 288 இல் இருந்து 275 ஆக திருத்தப்பட்டுள்ளது. சில உடல்களை தவறாக இரண்டு முறை எண்ணிவிட்டதாக ஒடிசா அரசாங்கம் இதற்கு விளக்கம் அளித்திருந்தது. 187 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களால் உரிமை கோரப்படும் வரை அந்த உடல்களை வைத்திருப்பது உள்ளூர் நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக இருக்கும்,