தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
தெற்கு வங்கக்கடல் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக இன்று(ஜூலை.,2) காலை முதல் தமிழகத்தின் சென்னை, கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருவதாக தெரிகிறது.
இதன்படி ஜூலை 5ம் தேதி வரை பரவலான மழை ஆங்காங்கே பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையினை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கேரள-கர்நாடகா கடலோர பகுதிகள், இலட்சத்தீவு பகுதிகள், மாலத்தீவு போன்ற பகுதிகளில் ஜூலை 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ.,வேகத்தில் வீசக்கூடும்.
மேலும், இடையிடையே 55 கிமீ.ம், வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வரும் ஜூலை 5ம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.