Loading...
100% குப்பை இல்லாத நகரங்கள்; ஓராண்டிற்குள் 50 முக்கிய நகரங்களை முழுமையாக கிளீன் செய்ய மத்திய அரசு திட்டம்
ஓராண்டிற்குள் 50 முக்கிய நகரங்களை முழுமையாக கிளீன் செய்ய மத்திய அரசு திட்டம்

100% குப்பை இல்லாத நகரங்கள்; ஓராண்டிற்குள் 50 முக்கிய நகரங்களை முழுமையாக கிளீன் செய்ய மத்திய அரசு திட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 07, 2026
09:09 am

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ஒரு புதிய முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய 50 நகரங்களை முழுமையாக குப்பைகளற்ற நகரங்களாக மாற்றுவதற்காக பிரகதி-50 (PRAGATI-50) என்ற புதிய தீவிர கண்காணிப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திட்டத்தின்கீழ் வீடுகள் தோறும் 100 சதவீதம் கழிவுகளை சேகரிப்பதுடன், 90 சதவீதம் கழிவுகளைப் பிரித்தெடுத்தல் மற்றும் பழைய குப்பைக் கிடங்குகளை ஓராண்டிற்குள் முழுமையாக மீட்கும் இலக்குகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய முயற்சி நாட்டின் நகர்ப்புறத் தூய்மையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல்

தேர்வு செய்யப்பட்ட முக்கிய நகரங்கள் மற்றும் பிரதமர் மோடியின் வழிகாட்டுதல்

பொருளாதாரம், பாரம்பரியம், ஆன்மீகம், சுற்றுலா மற்றும் நிர்வாக முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களான திருப்பதி, டெல்லி, பனாஜி, பெங்களூரு, மைசூர், திருவனந்தபுரம், மும்பை, ஆக்ரா, மதுரா மற்றும் வாரணாசி உட்பட 50 நகரங்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற தூய்மை பாரத இயக்கத்தின் மறு ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்தே பிரகதி-50 திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த நகரங்கள் பிற அனைத்து இந்திய நகரங்களுக்கும் முன்மாதிரியாகத் திகழும் வகையில் அமைந்திட மத்திய நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தீவிரமான பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆய்வு நடைமுறைகள்

மூன்று காலக்கட்ட மதிப்பீடுகள் மற்றும் மூன்றாம் தரப்பு ஆய்வு நடைமுறைகள்

திட்டத்தின் கீழ் நகரங்களின் செயல்திறனைக் கண்காணிக்க குறுகிய காலம் (6 மாதங்கள்), நடுத்தர காலம் (6-12 மாதங்கள்) மற்றும் நீண்ட காலம் (12-24 மாதங்கள்) என மூன்று கட்ட இலக்குகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, முதல் 6 மாதங்களுக்குள் பழைய குப்பைக் கிடங்குகளில் 75 சதவீதத்தையும், 12 மாதங்களுக்குள் 100 சதவீதத்தையும் முழுமையாக அகற்ற கெடு விதிக்கப்பட்டுள்ளது.

தரவுகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய மத்திய அரசால் நியமிக்கப்படும் சுயாதீன மூன்றாம் தரப்பு முகமைகள் மூலம் தொடர் கள ஆய்வுகள் நடத்தப்பட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

ADVERTISEMENT

அவசரக் கடிதம்

மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய அரசின் அவசரக் கடிதம்

தற்போதைய புதிய இலக்குகளை விரைவாக அடைவதற்கு தங்களது முழு ஒத்துழைப்பை வழங்குமாறு அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகளுக்கும் மத்திய நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் அதிகாரப்பூர்வக் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், ஒவ்வொரு நகரத்திற்கும் பிரத்யேக அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுத் நேரடி மேற்பார்வை மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவிர முயற்சியின் மூலம் நாட்டின் முக்கிய 50 நகரங்களும் விரைவில் முற்றிலும் கழிவுகளற்ற தூய்மையான நகரங்களாக உருவெடுக்கும் எனக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT