ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சம்மன்
2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் மோசடி வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு(என்சிபி) சமீபத்தில் கைது செய்தது. இந்த விவகாரத்தில் இயக்குநர் அமீர் மற்றும் ஜாஃபர் சாதிக் இடையே தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் என்சிபி துணை இயக்குநர் ஜெனரல்(செயல்பாடுகள்) ஞானேஷ்வர் சிங் முன்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது, ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக ஏப். 2ஆம் தேதி டெல்லியில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் அமீரின் நண்பர் அப்துல் பாஷிகிற்கும் இதே போல ஒரு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.