LOADING...
பெங்களூரு ஓலா ஊழியர் தற்கொலை வழக்கு CCB விசாரணைக்கு மாற்றம்
அரவிந்த் கண்ணன், செப்டம்பர் 28, 2025 அன்று விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்

பெங்களூரு ஓலா ஊழியர் தற்கொலை வழக்கு CCB விசாரணைக்கு மாற்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 21, 2025
03:59 pm

செய்தி முன்னோட்டம்

பெங்களூருவில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் பணியாற்றிய பொறியாளர் கே. அரவிந்த் கண்ணன் தற்கொலை வழக்கை, பெங்களூரு நகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு (Central Crime Branch - CCB) விசாரணைக்கு மாற்றியுள்ளது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் ஹோமோலோகேஷன் இன்ஜினியராக(Homologation Engineer) பணியாற்றி வந்த 38 வயதான கே. அரவிந்த் கண்ணன், செப்டம்பர் 28, 2025 அன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அரவிந்தின் சகோதரர் அஸ்வின் கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான பவிஷ் அகர்வால் மற்றும் வாகன ஹோமோலோகேஷன் தலைவர் சுப்ரத் குமார் தாஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

காரணம்

பணியிட அழுத்தம் தான் காரணமா?

அரவிந்த் கண்ணன் எழுதி வைத்ததாக கூறப்படும் 28 பக்க தற்கொலை குறிப்பில், மேற்பார்வையாளர்களின் மனரீதியான துன்புறுத்தல், சம்பளம் மற்றும் பிற சலுகைகளை வழங்காதது ஆகியவை தனது மரணத்திற்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அரவிந்தின் மரணத்திற்குப் பிறகு, செப்டம்பர் 30 அன்று, அவரது வங்கிக் கணக்கிற்கு ரூ. 17.46 லட்சம் மாற்றப்பட்டுள்ளது. இது சந்தேகத்திற்குரிய நிதிப் பரிமாற்றம் என்று அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பவிஷ் அகர்வால் மற்றும் பிற அதிகாரிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணையின் பெயரில் காவல்துறையினர் மனுதாரர்களை துன்புறுத்தக் கூடாது என்று உத்தரவிட்டதுடன், விசாரணையில் ஒத்துழைக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.