Page Loader
இன்று முதல் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் 
இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது

இன்று முதல் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் 

எழுதியவர் Venkatalakshmi V
Mar 04, 2025
11:31 am

செய்தி முன்னோட்டம்

இன்று முதல் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. முன்னதாக தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலின் காரணமாக, அலுவலகத்திற்கு செல்வோர், கல்லூரி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த நெரிசலை குறைக்கவே தற்போது இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது என தெரிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பால், தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

மாற்று ஏற்பாடு 

பயணிகள் வசதிக்காக மாற்று ஏற்பாடுகள்

இந்த புதிய மாற்றத்தை தொடர்ந்து, பயணிகளின் வசதிக்காக, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகர போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்குகிறது. ஏற்கனவே சென்னை முழுவதும் 80 வழித்தடங்களில் 589 பேருந்துகளை 3795 பயணநடைகளுடன் இயக்கிக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளது. இது தவிர தற்போது கூடுதலாக 104 பேருந்துகள் மற்றும் 816 பயணநடைகள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள், மாநகர போக்குவரத்து சேவையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என போக்குவரத்து கழகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.