Page Loader
பீகார் - தேர்வறையில் 500 மாணவிகளை கண்டு மயக்கமடைந்த மாணவன்
பீகார் - தேர்வறையில் 500 மாணவிகளை கண்டு மயக்கமடைந்த மாணவன்

பீகார் - தேர்வறையில் 500 மாணவிகளை கண்டு மயக்கமடைந்த மாணவன்

எழுதியவர் Nivetha P
Feb 03, 2023
09:48 pm

செய்தி முன்னோட்டம்

பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டம் ஷெரீப் பகுதியில் இயங்கிவரும் அமலா இக்பால் பள்ளியில் படித்துவரும் 17வயது மாணவர் ஒருவர் சுந்தர்கர் பகுதியில் உள்ள பிரில்லியண்ட் கான் வென்ட் பள்ளியில் இருந்த தேர்வு மையத்திற்கு 12ம்வகுப்பு பொதுதேர்வு எழுத சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. அன்று கணித தேர்வு நடைபெற்றுள்ளது, அனைவரும் தேர்வுஎழுத துவங்கியுள்ளனர். அப்பொழுது தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவனுக்கு சிறிது நேரத்திலேயே படபடப்பு ஏற்பட்டு, அவர் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனைகண்டு பதறிய தேர்வு அதிகாரி அந்த மாணவனை எழுப்ப முயன்றுள்ளார். ஆனால் அந்த மாணவன் மயக்கத்தில் இருந்து எழவில்லை என்பதால், இது குறித்து சக ஊழியர்களுக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அந்த மாணவன் அனுமதிக்கப்பட்டார்.

ஹால்டிக்கெட்டில் தவறான பாலினம்

500 மாணவிகள் மத்தியில் ஒரே ஒரு மாணவன் என்பதால் படபடப்பு ஏற்பட்டு மயக்கம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு மயங்கி கீழேவிழுந்ததில் கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. மற்றபடி அவரது உடல்நிலை சீராகவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவனுக்கு ஏற்பட்ட மயக்கம் எதனால் என்று அவரது உறவினர் கூறியுள்ளதாவது, மாணவர் தேர்வு எழுதசென்ற மையத்தில் 500மாணவிகள் மட்டுமே தேர்வுஎழுத வந்துள்ளனர். அவர்களுக்கு மத்தியில் இவர் ஒரேஓரு மாணவர் என்பதால் வெட்கம் அதிகமாகி படபடப்பு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து தேர்வுமைய அதிகாரிகள் கூறுகையில், மாணவரின் ஹால்டிக்கெட்டில் அவரது பாலினம் பெண் என்று தவறுதலாக குறிப்பிட்டிருக்கலாம். அதனால் அவருக்கு பெண்கள் தேர்வுஎழுதும் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர் தனது ஹால்டிக்கெட்டில் பாலினம் தவறுதலாக இருப்பதை கண்டதும் உடனடியாக சரிசெய்திருக்க வேண்டும். இதுபோல் திருத்தங்கள் மேற்கொள்ள 20நாட்கள் அவகாசம் உள்ளது என்று கூறினர்.