கர்நாடகா மாநிலத்தில் பாஜக'வினர் போராட்டத்தினை கலைத்த தேனீக்கள்
கர்நாடகா மாநிலத்தில் மாநில அரசினை கண்டித்து பாஜக'வினர் கோலார் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டமானது பாஜக., எம்.பி. முனுசாமி தலைமையில் நடைபெற்றது என்று கூறப்படுகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்றனர். இப்போராட்டம் துவங்கிய சிலமணி நேரத்திலேயே அப்பகுதியில் இருக்கும் ஓர் மரத்தில் இருந்த தேனீக்கள் அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்களை கொட்ட துவங்கியதாக தெரிகிறது. சற்றும் எதிர்பாரா விதமாக தேனீக்கள் கொட்ட துவங்கியதால், கூட்டத்தில் இருந்த அனைவரும் அச்சத்தில் ஆளுக்கொரு திசையாக சிதறி ஓடியுள்ளனர் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஆட்சியரிடம் புகார் கடிதம்
இதனை தொடர்ந்து இந்த போராட்டத்தினை தலைமை தாங்கிய பாஜக., எம்.பி. முனுசாமி உள்பட கூடியிருந்த பாஜக'வினர் அனைவரும் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். பின்னர் அப்பகுதியில் இருந்த தேனீக்கள் அனைத்தும் விரட்டப்பட்டதை தொடர்ந்து, மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடிய பாஜக., எம்.பி. முனுசாமிமற்றும் அக்கட்சியினர் போராட்டத்தினை தொடர்ந்துள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பேசிய இவர்கள் கர்நாடக மாநிலத்தின் ஆளும் கட்சியான காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக புகார் கடிதம் ஒன்றினை எழுதி கொடுத்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது குறிப்பிடத்தக்கது.