விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில் புகைப்படங்கள் வெளியீடு
அயோத்தி ராமர் கோவிலின் மெகா கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ள நிலையில், இஸ்ரோவின் தேசிய தொலை உணர்வு மையம்(NRSC) உள்நாட்டு செயற்கைக்கோள் மூலம் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட ராமர் கோவிலின் முதல் காட்சிகளை பகிர்ந்துள்ளது. கும்பாபிஷேக விழாவிற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு, டிசம்பர் 16, 2023 அன்று இந்திய செயற்கைக்கோள்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை NRSC வெளியிட்டுள்ளது. அபிவிருத்தி செய்யப்பட்ட தஷ்ரத் மஹால், சரயு நதி, புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையம் ஆகிய கட்டுமானங்களும் புதிதாக பகிரப்பட்டுள்ள செயற்கைகோள் புகைப்படங்களின் தெரிகிறது. ராமர் கோவிலின் முதல் கட்ட பணிகள் நிறைவடைய உள்ள நிலையில், நாளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.