உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.25 கோடி - தொகையை உயர்த்திய அயோத்தி சாமியார்
செய்தி முன்னோட்டம்
சென்னையில் கடந்த 2ம் தேதி நடைபெற்ற 'சனாதன ஒழிப்பு மாநாடு' நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் அவர் பேசிய கருத்துக்கள் ஓர் பேசுபொருளாக மாறியது.
இந்த விவகாரத்தினை எதிர்த்து அவருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.
தங்கள் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
பாஜக மற்றும் இந்து அமைப்பினர் இணைந்து உதயநிதிக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்யா என்னும் சாமியார் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படத்தினை கத்தியால் குத்தி, தீயிட்டு கொளுத்தி தனது ஆவேசத்தினை அவர் வெளிப்படுத்தினார்.
எதிர்ப்பு
மன்னிப்பு கோராவிட்டால் தப்ப முடியாது - சாமியார் எச்சரிக்கை
மேலும் அவர், உதயநிதி தலையினை கொய்து வருவோருக்கு ரூ.10 கோடி கொடுப்பதாக அறிவித்தார்.
இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.
ஆனால் உதயநிதி ஸ்டாலினோ, 'இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் அஞ்ச மாட்டேன். தொடர்ந்து சனாதனம் குறித்து கருத்துக்களை தெரிவிப்பேன்' என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே மீண்டும் அந்த அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்யா என்னும் சாமியார், உதயநிதி மன்னிப்பு கோராவிட்டால் தப்பிக்க இயலாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து, ஏற்கனவே உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி என்று கூறியிருந்த நிலையில், தற்போது அத்தொகையினை உயர்த்தி ரூ.25 கோடியாக தருவதாகவும் அறிவித்துள்ளார்.