அடுத்த செய்திக் கட்டுரை

ஜாய் ஆலுக்காஸ் உரிமையாளர் வர்கீஸின் ரூ.305 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை
எழுதியவர்
Nivetha P
Feb 24, 2023
08:08 pm
செய்தி முன்னோட்டம்
கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 68 நகரங்களில் கடைகளை வைத்து நடத்தி வருகிறது.
மேலும் ஆன்லைனிலும் நகைகளை விற்பனை செய்து வருகிறது.
நாட்டிலேயே மிக பெரிய நகை நிறுவனங்களில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடவேண்டியவை.
ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் புரமோட்டர் வர்கீஸ் ஜாய்.
இவர் புதிய கடைகளை திறப்பதற்காகவும், சில கடன்களை அடைக்கவும் ஐபிஓ வாயிலாக பங்குகளை விற்பனை செய்ய ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் திட்டம் தீட்டிருந்தது.
இந்நிலையில் திடீரென ஐபிஓ பங்கு விற்பனையை ரத்து செய்தது.
தற்போது இதன் உரிமையாளர் வர்கீஸின் ரூ.305 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ஜாய் ஆலுக்காஸ் உரிமையாளர் வர்கீஸின் ரூ.305 கோடி சொத்துக்கள் முடக்கம்
ஜாய் ஆலுக்காஸ் - ரூ.305 கோடி |#Malaimurasu | pic.twitter.com/tIbq0J5kuF
— Malaimurasu TV (@MalaimurasuTv) February 24, 2023