தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: அதிமுக கூட்டணியிலிருந்து விலகி திமுகவுடன் இணைந்தது தேமுதிக
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து வந்த தேமுதிக, கடைசி நேரத் திருப்பமாக ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. கட்சி தொடங்கப்பட்ட 2005-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை திமுகவுடன் கூட்டணி அமைக்காத தேமுதிக, முதல் முறையாக அக்கட்சியுடன் கைகோர்த்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் எல்.கே. சுதீஷ் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து இரு தரப்பினரும் தங்களது மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர். இதன் மூலம் திமுக - தேமுதிக கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
சந்திப்பு
"பழம் நழுவிப் பாலில் விழுந்தது"
செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "விஜயகாந்த் அவர்கள் இருக்கும்போதே 2016-இல் அமைய வேண்டிய கூட்டணி இது. அப்போது 'பழம் நழுவிப் பாலில் விழுந்தது' என மறைந்த தலைவர் கருணாநிதி அவர்கள் கூறினார். தற்போது மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பப்படி இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளோம்," என்று தெரிவித்தார். இந்த கூட்டணியில் தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த மெகா கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுமென பிரேமலதா நம்பிக்கை தெரிவித்தார். அதிமுக மற்றும் பாஜக தரப்பிலிருந்து தேமுதிகவை இழுக்க கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், திமுகவின் எ.வ. வேலு உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தை தேமுதிகவை, திமுக பக்கம் கொண்டு வந்திருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) February 19, 2026
சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத்… pic.twitter.com/n7qD7Ex8UH