
பாகிஸ்தானுக்கும் அம்ரித்பாலுக்கும் தொடர்பு இருக்கிறதா: புதிய தகவல்
செய்தி முன்னோட்டம்
பிரிவினைவாத தலைவரான அம்ரித்பால் சிங்கை காவல்துறையினர் தீவிரமாக தேடிவரும் நிலையில், பாகிஸ்தானுக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை அமைப்புகள் கூறுயுள்ளன.
அம்ரித்பால் சிங்கின் நிதியாளரான தல்ஜித் கல்சி, பாகிஸ்தான் முன்னாள் ராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவின் மகனுக்கு நெருக்கமானவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்சி, துபாயைச் சேர்ந்த சாத் பஜ்வா நிறுவனத்துடன் தொடர்புடையவர் என்றும் அவர் இரண்டு மாதங்கள் துபாயில் தங்கி இருந்ததார் என்றும் நம்பப்படுகிறது.
கல்சி, துபாயில் தங்குவதற்கு காலிஸ்தானி பயங்கரவாதி லாண்டா ஹரிகே ஏற்பாடு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
அவர் பாகிஸ்தானிய இன்டர் சர்வீசஸ் உளவுத்துறை அல்லது ISI உடன் தொடர்பில் இருந்தற்கான ஆதாரங்கள் உள்ளன.
பஞ்சாப்
அம்ரித்பாலின் நெருங்கிய நண்பர் தல்ஜித் கல்சி
கல்சி, பாம்பிஹா கும்பலுக்கு நெருக்கமான ஒரு கும்பலுடன் தொடர்புடையவர் என்றும், டெல்லி திகார் சிறையில் இருக்கும் கேங்க்ஸ்டர் நீரஜ் பவானியாவுக்கும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.
கல்சி, சிறிது காலத்திற்கு முன்பு டெல்லியில் ஒரு அலுவலகத்தை நிறுவி, அங்கு மாடலிங் மற்றும் திரைப்பட ஒப்பந்தங்களுக்கு முகவராக பணியாற்றினார்.
கல்சி, அம்ரித்பாலின் நெருங்கிய நண்பர் மற்றும் நம்பிக்கைக்குரியவர் ஆவார்.
கடந்த மாதம், தனது முக்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அம்ரித்பால் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தின் போது காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் பெரும் சண்டை ஏற்பட்டது.
தற்போது, அம்ரித்பால் சிங் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க பல்வேறு நகரங்களில் பல்வேறு வேஷங்களோடு சுற்றி கொண்டிருக்கிறார்.