நேபாளத்தில் ஒழிந்திருக்கிறாரா அம்ரித்பால் சிங்: உஷார் நிலையில் இருக்கும் நேபாள போலீஸ்
செய்தி முன்னோட்டம்
மார்ச் 18 தலைமறைவாகிய காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங், அவரை தேடி கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான போலீஸாருக்கு தண்ணீர் காட்டி கொண்டிருக்கிறார்.
தீவிரவாத மத தலைவர் அம்ரித்பால் இந்திய எல்லையோரத்தில் இருக்கும் நேபாளத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அந்நாட்டு போலீசாரும் உஷார் நிலையில் உள்ளனர்.
தப்பியோடிய காலிஸ்தான் ஆதரவாளர் நாட்டின் கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், நேபாள காவல்துறை செய்தித் தொடர்பாளர் போஷ்ராஜ் போகராஜ் போகரேல், "அமிர்தபால் நேபாளத்திற்குள் நுழைந்தது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை" என்று கூறியுள்ளார்.
அம்ரித்பாலைக் கண்டுபிடிக்க, இந்திய பாதுகாப்பு படையினர் நேபாளத்திற்குள் நுழைந்ததாக வெளியான செய்திகள் உண்மையில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
details
தலைமறைவாக இருந்த பால்பிரீத் சிங் நேற்று கைது செய்யப்பட்டார்
நேபாளத்திற்குள் அமிர்தபால் நுழைவது குறித்து விழிப்புடன் இருக்குமாறு இந்தியா, நேபாளத்திடம் கேட்டு கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலிஸ்தான் தலைவர் இதுவரை நேபாளத்திற்குள் நுழையவில்லை என்று அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தியத் தூதரகம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, நேபாள குடிவரவுத் துறை கடந்த மாதம் அம்ரித்பால் சிங்கைக் கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்தது.
மார்ச் 18ஆம் தேதியில் இருந்து அம்ரித்பால் தலைமறைவாகி விட்டார். அதன் பிறகு, அவருக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று, அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளர் பால்பிரீத் சிங்கை அம்ரிசரின் கத்து நங்கல் பகுதியில் இருந்து புஞ்சா போலீசார் கைது செய்தனர்.
அம்ரித்பால் சிங் எங்கிருக்கிறார் என்பது பற்றி அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.