அண்ணாமலை பாதயாத்திரை துவக்க விழா: கொடியசைத்து துவக்கி வைக்கிறார் அமித்ஷா
செய்தி முன்னோட்டம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்னும் பெயரில் பாதயாத்திரை மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தார்.
அதன்படி அந்த யாத்திரையினை அவர் இன்று(ஜூலை.,28) ராமேஸ்வரத்தில் இருந்து துவங்கவுள்ளார்.
இந்த துவக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு யாத்திரையை கொடியசைத்து துவக்கி வைக்கவுள்ளார் என்றும் முன்னதாகவே கூறப்பட்டது.
அதன் படி, இந்த விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமித்ஷா மதுரை வந்தடைந்தார்.
அதன் பின்னர், அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Embed
துவக்க விழா
#JUSTIN | அண்ணாமலையின் பாதயாத்திரை துவக்க விழா ராமேஸ்வரத்தில் நடைபெறும் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை துவக்க விழா பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடியசைத்துத் துவக்கி வைக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பாஜக எம்.எல்.ஏ. வானதி... pic.twitter.com/FmlGn4f26M— Thanthi TV (@ThanthiTV) July 28, 2023