
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது
செய்தி முன்னோட்டம்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது நாளை(ஜூன்.,13) காலை 10.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டமானது அதிமுக கட்சியின் தற்போதைய பொது செயலாளராக உள்ள எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் நடக்கவுள்ளது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகத்தில் அதிமுக கட்சியின் எதிர்கால திட்டங்கள் என்னனென்ன என்பது குறித்த விரிவான விவாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டம்
ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்ட மாநாடு
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலினை கையாள்வது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஆலோசித்து, அதற்கான தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளது.
அதன்படி இந்த தேர்தல் தொடர்பாகவும் நாளை நடக்கும் கூட்டத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் விரிவாக விவாதிப்பார், மாவட்ட செயலாளர்களும் தங்கள் கருத்துக்களையும் முன்வைப்பார்கள் என்று தெரிகிறது.
மேலும் இந்த நாடாளுமன்ற தேர்தலினையொட்டி, வரும் ஆகஸ்ட் மாதம் மதுரை மாவட்டத்தில் அதிமுக சார்பில் பிரம்மாண்டமான மாநாடு நடக்கவுள்ளது.
இதனை மிக சிறப்பாக நடத்த வேண்டும் என்று எடப்பாடி கே பழனிசாமி ஏற்கனவே கட்சியின் முன்னணி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.