பெரியார் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார் த.வெ.க. தலைவர் விஜய்
தந்தை பெரியாரின் பிறந்த நாளுக்கு தீவுத் திடலுக்கு நேரில் சென்று நடிகர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள விஜய், முன்னதாக காலையில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, "சமத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிப்போம்" என ஒரு அறிக்கை வெளியிட்டு பெரியாரை நினைவுகூர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து, சென்னை தீவுத் திடலில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்திற்கு நேரில் சென்ற விஜய், அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நடிகர் விஜய் பெரியார் நினைவிடத்திற்கு சென்றபோது, கூட்டத்தை கூட்டாமல் ரகசியமாக சென்று வந்துள்ளார். அவருடன் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட வெகு சில நிர்வாகிகள் மட்டுமே உடன் சென்றிருந்தனர்.