Page Loader
மீண்டும் கோவையில் களமிறங்குகிறார் கமல்ஹாசன் 
மீண்டும் கோவையில் களமிறங்குகிறார் கமல்ஹாசன்

மீண்டும் கோவையில் களமிறங்குகிறார் கமல்ஹாசன் 

எழுதியவர் Nivetha P
Sep 22, 2023
03:13 pm

செய்தி முன்னோட்டம்

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணிகள் குறித்து மக்கள் நீதிமய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கோவை மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்நிலையில் இந்த கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன்,"மக்களவை தேர்தலில் கோவையில் தான் போட்டியிட போகிறேன். கோவையில் எனக்கு நிறைய ஆதரவு இருக்கிறது. எனவே மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட முடிவுச்செய்துள்ளேன்" என்று அறிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 'விக்ரம்' படத்திற்கு கூட்டம் கூடுகையில், மக்கள் நீதிமய்யத்திற்கு கூட்டம் கூடாதா?என்றும் கூறியுள்ளார். மேலும், சனாதனம் என்னும் ஒத்த வார்த்தைக்கு பெரியளவில் பிரச்சனை செய்து வருகிறார்கள். அந்த வார்த்தையை எடுத்துரைத்தவர் பெரியார் தான் என்றும், அதனால் பெரியாரை திமுக அல்லது வேறெந்த கட்சியும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும், அவர் தமிழ்நாட்டிற்கே சொந்தம் என்றும் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

கமலின் அறிவிப்பு