இந்தியாவில் ஒரே நாளில் 53 கொரோனா பாதிப்பு
நேற்று(ஜூலை 1) 40ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 53ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 1,490ஆக சரிவடைந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும். இதுவரை, இந்தியாவில் 4.49 (4,49,94,281) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,907ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் ஒரு உயிரிழப்பு பதிவாகி இருக்கிறது. கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 37,316 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்
இந்தியாவில் ஜூன் 30ஆம் தேதி 44 பாதிப்புகளும் ஜூன் 29ஆம் தேதி 47 பாதிப்புகளும் ஜூன் 28ஆம் தேதி 65 பாதிப்புகளும், ஜூன் 27ஆம் தேதி 33 பாதிப்புகளும் ஜூன் 26ஆம் தேதி 47 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன. கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,60,884 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் இதுவரை பேர் 6,895,913 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை, உலகளவில் 690,956,554 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 663,554,935 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் 37,316 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.