
அரிய வகை மருந்துகளின் இறக்குமதிக்கு சுங்கவரி ரத்து - மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
அரிய வகை நோய்களுக்கான தேசிய கொள்கை 2021ல் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து அரியவகை நோய்களின் சிகிச்சைக்காக தனிநபர் பயன்பாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எல்லா விதமான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ தேவைகளுக்கான உணவுகளுக்கு அடிப்படை சுங்கவரி செலுத்த வேண்டாம் என்று மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.
இந்த சலுகையினை பெற வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மருத்துவ அதிகாரி அல்லது மத்திய,மாநில சுகாதாரச்சேவை இயக்குனரிடமிருந்து சான்றிதழ் ஒன்றினை பெற்று இறக்குமதி செய்யும் நபர் சமர்ப்பிக்கவேண்டும்.
10 கிலோ எடையுள்ள குழந்தைக்கு அரியவகை நோய் பாதிப்பிற்கான சிகிச்சையளிக்க வருடந்தோறும் ரூ.10லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவாகும்.
ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிவிலக்கால் கணிசமானத்தொகை சேமிக்கப்படும்.
நோயாளிகளுக்கு பெரும் நிவாரணமும் கிடைக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
அரிய வகை மருந்துகளின் இறக்குமதிக்கு சுங்கவரி ரத்து - மத்திய அரசு
#JUSTIN
— News7 Tamil (@news7tamil) March 30, 2023
"அரியவகை நோய் சிகிச்சைக்காக தனிப்பட்ட முறையில் மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்கள் இறக்குமதிக்கு சுங்கவரி கிடையாது"
- மத்திய அரசு அறிவிப்பு #Medical | #Diseases | #Customs | @mansukhmandviya | @Subramanian_ma | #News7TamilUpdates