
பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு - 'ஆவின்' நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் ஆவின் பால் பொருட்களை வாங்காத பாலகங்களின் அனுமதியை ரத்து செய்ய 'ஆவின் நிர்வாகம்' முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆவின் நிறுவனமானது பால் மட்டுமின்றி பால் சார்ந்த 200க்கும் மேற்பட்ட பொருட்களை தயார் செய்கிறது.
இந்நிலையில் ஆவின் பாலகங்களில் மட்டுமின்றி தனியார் சூப்பர் மார்க்கெட்களிலும் ஆவின் பால் பொருட்கள் விற்கப்படுகிறது.
அதே போல், ஆவின் பாலகங்களை நடத்த தனியாருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஆவினில் பால் கொள்முதல் செய்ய சமூக வலைத்தளத்தில் ஓர் குழுவும், பால் பொருட்களை கொள்முதல் செய்ய மொபைல் போன் செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் பால் பொருட்களை முன்பதிவு செய்தால் மறுநாள் மாலை பதிவு செய்த பால் பொருட்கள் கிடைத்துவிடும்.
ரூ.10,000க்கு கொள்முதல் செய்யாவிட்டால் அனுமதி ரத்து
'ஆவின்' பால் பொருட்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை
இவ்வளவு வசதிகளை ஆவின் நிறுவனம் செய்துள்ள நிலையிலும், பாலகம் நடத்தும் பலர் பால் பொருட்களை கொள்முதல் செய்வதில்லை.
ஆவின் பாலகம் என்ற பெயரில் டீ கடைகளையும், மளிகை கடைகளையும் நடத்தி பாலை மட்டும் விற்பனை செய்கிறார்களே தவிர, பால் பொருட்கள் அங்கு மக்களுக்கு கிடைப்பதில்லை.
இதனையடுத்து அனைத்து இடங்களிலும் தங்கு தடையின்றி ஆவின் பால் பொருட்கள் கிடைக்க ஆவின் நிறுவனம் ஓர் முடிவினை எடுத்துள்ளது.
அதன்படி, இதன் முதற்கட்டமாக அனைத்து பாலகங்களும் வாரம் ஒரு முறை கண்டிப்பாக ரூ.10,000க்கு ஆவின் பால் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும்.
அப்படி செய்ய தவறினால் அந்த பாலகங்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.