ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பிற்கான கால அவகாசம் நீட்டிப்பு
இந்தியாவில் கடந்த 2021ம்ஆண்டு நடந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் சட்டத்திருத்தத்தில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை இணைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கான காலஅவகாசம் ஆகஸ்ட் 1, 2021முதல் மார்ச் 31,2023வரை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே இந்த இணைப்பு குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் 31ம்தேதியோடு கால அவகாசம் முடிவடையும் நிலையில், நாடு முழுவதிலும் பாதியளவில் கூட இந்த பணிகள் நிறைவேறவில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இதனால் இந்த இணைப்பிற்கான கால அவகாசத்தினை ஓராண்டிற்கு நீட்டிப்பதாக நீதித்துறை அமைச்சகம் அண்மையில் அறிவித்துள்ளது. அதன்படி 2024ம் ஆண்டு மார்ச் 31ம்தேதிக்குள் ஆதார் கார்டுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பினை செய்து கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.