சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 8 பேர் உயிரிழப்பு
சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த வெடி மருந்துகள் வெடித்து சிதற, அந்த விபத்தில் 5 பெண் தொழிலாளர்கள், 3 ஆண் தொழிலாளர்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 பேர் தீக்கயங்களுடனும் மீட்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில், சுதர்சன் என்பவருக்குச் சொந்தமான தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டு சில மணி நேரத்திற்கு பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருந்ததால் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த ஆலையின் 7 அறைகள் தரைமட்டமாகின.
பட்டாசு ஆலையில் வெடி விபத்து
#Breaking | சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்!#SunNews | #FireAccident https://t.co/4Lqaq7JRTH— Sun News (@sunnewstamil) May 9, 2024
பட்டாசு ஆலையில் வெடி விபத்து
தயவு செஞ்சு இந்த தொழில் நமக்கு வேண்டாம், அவங்களுக்கு வேற தொழில் சொல்லிக் கொடுங்க, எவ்வளவு உயிர் பலி??? #சிவகாசி #Sivakasi #Virudhunagar #விருதுநகர் #தமிழ்நாடு #Tamilnadu #தமிழ் #Tamil https://t.co/i8E8xAkfNA— Sathish (@sathish_kural) May 9, 2024