
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தின் 6 மாவட்டங்களில் வரும் ஜூலை 3ம்தேதிவரை கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தை நோக்கி வீசக்கூடிய மேற்குத்திசை காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டக்காரணத்தினால் தமிழ்நாடு,புதுச்சேரி மாநிலங்களில் இன்று(ஜூன்.,30)சில இடங்களிலும், வரும் ஜூலை.,1ம் தேதி சில இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய மிதமானது முதல் லேசானது வரை மழைப்பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து வரும் ஜூலை 2ம்தேதி கோவை, திண்டுக்கல்,தேனி, தென்காசி, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமானது முதல் மிதமான மழைப்பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 2நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சிலப்பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய மிதமானமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
தமிழகத்தின் வானிலை அறிக்கை
#JUSTIN || தமிழகத்தில் வரும் 2ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
— Thanthi TV (@ThanthiTV) June 30, 2023
*நீலகிரி, கோவை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
*சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்#TNRain #WeatherUpdate #ChennaiRain #ThanthiTV pic.twitter.com/HYuF1tKdAu