
விதவைகளுக்கு திருமணம் செய்து வைப்பேன் - வைரலாகும் 5ம் வகுப்பு மாணவன்
செய்தி முன்னோட்டம்
சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் மகேஸ்வர் என்பவர் தனது 5ம்வகுப்பு மகன் தேர்வில் எழுதிய கேள்வி பதில்களை பதிவு செய்துள்ளார்.
அதில், சுதந்திரத்திற்கு முன்னர் சமூகஆர்வலராக இருந்திருந்தால் எந்தவொரு தவறான விஷயத்தை மாற்ற போராடியிருப்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு அந்த சிறுவன், நான் விதவை மறுமண சட்டத்தை அமல்படுத்த போராடியிருப்பேன்.
அந்தகாலத்தில் கணவர் உயிரிழந்தால் சதி வழக்கப்படி பெண்கள் உடன்கட்டை ஏறவேண்டும் அல்லது,
மொட்டை அடித்துக்கொண்டு வெள்ளை ஆடை அணிந்துகொண்டு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்.
அதற்கு பதில் அவர்களுக்கு மறுமணம் செய்து வைத்தால் அவர்கள் வாழ்க்கை முன்பைவிட, சந்தோஷமாக இருக்கும் என்று எழுதியுள்ளார்.
இந்த பதிலுக்கு அந்த சிறுவனின் ஆசிரியர் 'வெரி குட்' என எழுதியுள்ளார். இது தற்போது வைரலாக பரவிவருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
விதவைகளுக்கு திருமணம் செய்து வைப்பேன் - வைரலாகும் 5ம் வகுப்பு மாணவன்
My Son responds to a question in a Class 5 exam paper.. pic.twitter.com/lR7BQASAzQ
— Maheshwer Peri (@maheshperi) March 15, 2023